[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் ! 

the-tribal-people-were-lost-their-homes-because-of-the-negligence-of-the-authorities-at-madurai

மதுரை அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டை இழந்து பச்சிளங் குழந்தைகளுடன் வீதியில் நிற்கும் மலைவாழ் மக்கள்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மொக்கத்தான்பாறை மற்றும் அழகம்மாபுரம் ஆகிய மலைவாழ் கிராமங்கள். இங்கு வசிக்கும் 12 மலைவாழ் குடும்பத்தை சேர்ந்தவா்களுக்கு, கடந்த 2013-14ஆம் நிதியாண்டில் நக்சல் நலத்திட்டத்தின் கீழ் தலா 1.20 லட்சம் மதிப்பில் இலவச வீடுகள் கட்டிதருவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

ஆனால் அந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வீடு கட்டுவதற்கான தொகையை உயர்த்தினால் மட்டுமே கட்ட முடியும் என ஊராட்சி அலுவலா்கள் மற்றும் ஊரக வளரச்சிதுறை அதிகாரிகளும் தெரிவித்தனர். ஆனால் வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணம் செலுத்துவதற்கான பொருளதாரம் இல்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் பழையுர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்ற கட்டிட ஒப்பந்தகாரர் தனது சொந்த பணத்தில் வீடுகளை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அரசு அதிகாரிகள் ஓப்புதலோடு பயனாளிகளுடன் 1.20 லட்சம் அரசு தொகையும், பொதுநிதியிலிருந்து கூடுதலாக தலா 50ஆயிரம் ஓதுக்கீடு செய்வதாகவும்
ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் உதவிப்பொறியாளா் அளித்த ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு ஒப்பந்தகாரர் அழகா்சாமி, தனது சொந்த செலவில் 10வீடுகளை கட்ட தொடங்கினார். பின் அவர் முதல் தவணை பணத்தினை அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, பணிகள் முழுவதும் முடித்தவுடன் பயனாளிகள் பெயரில் பணத்தை தந்துவிடுகிறோம் என அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை நம்பி வீடுகளை கட்டி முடித்துள்ளார்.

இந்நிலையில் வீடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை பயனாளிகள் மூலமாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் 2 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளனர். மேலும் பணம் அளிப்பதற்கு அதிகாரிகள் மறுத்த நிலையில் ஒப்பந்தகாரர் பயனாளிகளின் வீட்டை உடனடியாக காலி செய்து பூட்டு போட்டு விட்டு சாவியை எடுத்து சென்று விட்டார்.

இதனால் செய்வதறியாது திகைத்த மலைவாழ் குடும்பத்தினா் 10க்கும் மே்றபட்டோர் தங்களது குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது குழந்தைகளுக்கு மாற்று உடையின்றி பசியோடு குடிக்க தண்ணீரின்றி கண்கலங்கி நின்றனர். இது பார்ப்போரை அனைவரையும் கண்கலங்க வைத்தது. இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்களும், ஒப்பந்ததாரரும் கோரிக்கை விடுத்தனா்.

குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் தொகையை பெறாவிட்டால் காலவதியாகிவிடும் நிலையில் அரசின் அலட்சியத்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என ஒப்பந்தகாரர் அரசு மீது குற்றம்சாட்டினார். அடிப்படை வசதியின்றி காடுகளில் வாழ்ந்த மலைவாழ் மக்களுக்கு அரசு உதவி செய்வதாக கூறிவி்ட்டு அலட்சியத்தால் தாங்கள் வீதியில் நிற்பதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close