[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வைத்து பட புரோமோஷனா ? கடுப்பான நெட்டிசன்கள்

pollachi-case-movie-crew-use-this-hashtag-for-promotion

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வரும் நிலையில் அந்த ஹேஷ்டேக்குகள் பட  புரோமோஷனுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதும் எதிரொலித்துள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நேற்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #PunishTheRapists, #PollachiRapists, 
#PunishTheRapists, #JusticeForWomen போன்ற ஹேஷ்டேக்குகள் அதிக அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இதனிடையே இந்த ஹேஷ்டேக்குளை படக்குழு ஒன்று அப்படத்தின் புரோமோஷனுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட படம், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தண்டிக்கும் விதமான படம் என்பதால் அதுபோன்ற ஹேஷ்டேக்குகளை படக்குழு பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டர்வாசிகள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் சிறிய வீடியோ க்ளிப்களை இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி, பதிவு செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close