[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“ பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்”- போலீஸார் தகவல்

pollachi-sexual-harassment-case-police-suspect-many-more-victims

பொள்ளாச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கிய கும்பலிடம் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது. கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை கடந்த மாதம் 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்‌ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனில் 40-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த கும்பலால் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பல வருடங்களாக இந்த கும்பல் பெண்களை காதல் செய்வதாக ஆசைவார்த்தி காட்டி, பின் பாலியல் தொல்லைகொடுத்து மிரட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பொள்ளாச்சி பகுதியில் ஏதேனும் பெண்கள், கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை. பலருக்கும் பயந்து பொண்டு பெண்கள் புகார்களை கொடுக்க முன்வராமல் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதனிடையே தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை, இந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பது போலவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து இந்தக் குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close