[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

chance-of-rain-in-tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச்சலம் காரணமாக, மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில், இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, ஓசூர் மற்றும் நத்தத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காவேரிப்பாக்கத்தில் 4 சென்டிமீட்டரும், சோளிங்கர் மற்றும் அரக்கோணத்தில் தலா 3 சென்டி மீட்டரும், செங்கம் மற்றும் மேட்டூரில் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close