[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

accident-near-perambalur-3-dead

பெரம்பலூர் அருகே சமயபுரம் பாதயாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர். பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு சாலையொட்டி நடந்து சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி சென்ற கார், பக்தர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சிறுவாச்சூரைச் சேர்ந்த பக்தர்கள் கலியன், பரமேஸ்வரி, காவேரி ஆகிய 3-பேரும்  சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மருதாம்பாள், சோலையம்மாள் ஆகிய இரண்டு பக்தர்கள் பெரம்பலூர் அரசு தலைமை  மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காரில் ஓட்டுநர் தவிர வேறு யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்தியவுடன் அவர் தப்பிச் சென்றதால், ஓட்டுநர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close