[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

விசாரணை கைதி உயிரிழப்பு... 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு

prisoner-dead-case-registered-on-5

புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர், சிறை வார்டன் உள்பட 5 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயமூர்த்தி என்ற இளைஞர் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக பாகூர் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயமூர்த்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தில், அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே ஜெயமூர்த்தியை போலீசார் அடித்துக் கொன்றதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டியதையடுத்து, பாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், டிஜிபி சுந்தரிநந்தா உத்தரவின்பேரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பிரிவு 304 கீழ் , இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறைவார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close