[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

“வேடந்தாங்கல் சரணாலயத்தை மூடுங்கள்” -  பொதுமக்கள் கோரிக்கை 

public-people-says-vedanthangal-birds-sanctuary-has-been-close

வேடந்தாங்கல் ஏரியில் நீர் இல்லாததால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மூட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை சீசனுக்காக திறந்திருக்கும். அப்போது ஆஸ்திரேலியா, மியான்மர், பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வர்ணநாரை, அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை,வெள்ளை நிற அரிவாள் மூக்கன் ,கூழைகடா, முக்குளிப்பான், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்புதாரா, சிறவி உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வந்து செல்வது வழக்கம். மேலும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பறவைகள் இங்கு வருவது வழக்கம்.

Image result for Vedanthangal bird sanctuary

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதால் வேடந்தாங்கல் ஏரியில் 30 சதவீதம் நீர் கூட நிரம்பவில்லை. இதனால் மூவாயிரத்துக்கும் குறைவான பறவைகள் மட்டுமே வந்துள்ளன. ஆகவே சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 

Image result for வேடந்தாங்கல் சரணாலயம்

மேலும் தற்போது ஏரியில் நீர் முற்றிலும் வற்றி வருவதால் நூற்றுக்கணக்கான பறவைகள் மட்டும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் பறவைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஆகவே பறவைகள் சரணாலயத்தை உடனடியாக மூட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close