[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தல் : இருவர் கைது

the-2-man-has-arrested-and-seizing-18-thousand-liters-of-smuggling-aliphatic

ராஜஸ்தானிலிருந்து தமிழகத்துக்கு லாரி மூலம் கடத்திவரப்பட்ட 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கிருஷ்ணகிரி  சுங்கசாவடியில் வைத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு லாரிகள் மூலம் எரிசாராயம் கடத்தபடுவதாக தமிழக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் மதுவிலக்கு கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தமிழக எல்லையில் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். இன்று காலை கிருஷ்ணகிரி சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 35 லிட்டர் அளவுக்கொண்ட 530 கேன்களின் 18 ஆயிரத்தி 550 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Image result for எரிசாராயம்

(File photo)

இதனைத்தொடர்ந்து எரிசாராயம் கடத்திவரப்பட்ட லாரி ஒட்டுர்கள் இருவரை விசாரித்தபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு எடுத்து செல்வது தெரியவந்தது. மேலும் பெங்களுர் வழியாக தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டதாகவும் இவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் என்பதும் தெரிய வந்தது. 

Related image

பின்னர் இது தொடர்பாக லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களிலிருந்து எரிசாராயம் தமிழகத்திற்கு கும்மிடிப்பூண்டி வழியாக கடந்த காலங்களில் எடுத்துவரப்பட்டது. அந்தப் பகுதியில் தொடர் சோதனையால் கடத்தல் தடுக்கபட்டதால் தற்போது பெங்களூர் வழியாக எடுத்து வந்துள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close