[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

மரத்தில் அமர்ந்து குறி சொன்ன பூசாரி தவறி விழுந்து பலி

priest-die-for-fall-down-from-the-tree-in-covai

பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் போது 20 அடி மரத்திலிருந்து தவறி விழுந்த கோயில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள ஐயா சாமி திருக்கோயிலில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோயிலில் அய்யாசாமி என்பவர் பூஜை செய்து வந்தார். ஆண்டுதோறும்‌ மகாசிவராத்திரியை முன்னிட்டு கோயில் மைதானத்தில் அமை‌க்கப்பட்ட 20 அடி பூஜை மரத்தின் மீது அமர்ந்து கொண்டு, இவர் பக்தர்களுக்கு குறி சொல்வது வழக்கம். 

அதேபோல இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடைபெற்ற போது, பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது ஏறி படுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி 20 அடி கம்பத்திலிருந்து விழுந்த பூசாரி அய்யாசாமி படுகாயமடைந்தார். உடனே பக்தர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து இருந்ததால் அப்பகுதியில் அங்குள்ள மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close