[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

“நான் தமிழுக்கு எதிரானவனா ?” - ஸ்டாலினுக்கு நாகசாமி பதில்

tamil-specialist-nagasamy-answer-to-dmk-leader-mk-stalin

தான் தமிழுக்கு எதிரானவன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தொல்லியல் அறிஞர் நாகசாமி தெரிவித்துள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் விருது குழுவிலிருந்து நாகசாமியை நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரியிருந்தார். இந்த நிலையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருது தேர்வுக் குழுவில் உறுப்பினராக தன்னை நியமிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்று நாகசாமி தெரிவித்துள்ளார். 

மேலும், வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது என்று நான் கூறியதாக ஸ்டாலின் தெரிவித்தது, எனது தனித்த பார்வை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழைக் கற்றுணர்ந்த மிகப்பெரும் அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லீஸ், ஜி.யு.போப், உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் கருத்துக்களையே தான் எதிரொலித்ததாக நாகசாமி தெரிவித்துள்ளார். பகவத் கீதையை திருக்குறள் பின்பற்றுவதாக போப் தனது புத்தகத்தில் தெரிவித்திருப்பதாகவும் நாகசாமி கூறியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close