[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மாணவர்களை பள்ளிக்குள் புகுந்து தாக்கிய போலீஸ்: பெற்றோர்கள் போராட்டம்

the-police-were-attacked-by-students-inside-the-school-campus-at-pudukkottai

புதுக்கோட்டை அருகே காவல்துறையினர் மாணவர்களை பள்ளிக்குள் புகுந்து தாக்கியதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் நகராட்சி அரசு உயர்நிலை பள்ளியில், சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனால் காவல்துறை நேற்று பள்ளிக்குள் நுழைந்து போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக சில மாணவர்களை தாக்கியுள்ளனர். மேலும் மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதற்கு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Image result for பள்ளி மாணவர்கள் போராட்டம்

(File Photo)

இந்நிலையில் இன்று வகுப்பை புறக்கணித்து, தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பள்ளி வாளகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்ட பெற்றோர்கள் மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா, இது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனஜா உறுதி அளித்தார். இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close