[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

kovai-sarala-joined-kamalhaasan-s-makkal-needhi-maiam-today

பிரபல நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகளிர் தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடிகை கோவை சரளா இணைந்தார். மேலும் கோவையைச் சேர்ந்த மருத்துவர் உஷா உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்களும் அக்கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவை சரளா, பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் மக்கள் நீதி மய்யம், மகளிர் நீதி மையமாக மாறிக்கொண்டிருக்கும் அளவிற்கு பெண்களின் ஆதரவு பெருகி வருவதாகவும் கூறினார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், அரசியல் சவுகரியத்திற்காக வேறு மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் தனக்கு பின்னர் தனது மகளோ, மைத்துனரோ இங்கு வரமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.  பெண்களை கீழ்மைப்படுத்தும் செயல்கள் இன்னமும் நடந்து கொண்டே ‌இருப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

இந்த விழாவில் சினேகன், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். சினிமாவில் நகைச்சுவை நடிகையாக உள்ள கோவை சரளா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘சதிலீலாவதி’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close