[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தேமுதிக கடந்து வந்த பாதை - அன்றும்.. இன்றும்..

2019-parliament-election-dmdk-political-history

தமிழக கூட்டணி அரசியலில் இதுவரை இல்லாத இழுபறியை தேமுதிக சந்தித்து வரும் நிலையில், அந்தக் கட்சி கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

புரட்சிக் கலைஞர், கேப்டன் என்ற பட்டப் பெயர்களுடன் தமிழ்த் திரையுலகில் பிரபல ஹீரோவாக இருந்த விஜயகாந்த், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 

ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி என்றாலும் தேமுதிக 8.4 சதவிகித வாக்குகள் பெற்றது. இந்த வாக்கு சதவிகிதம் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக தேமுதிகவை பார்க்க வைத்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தல்தான் தேமுதிக சந்தித்த அடுத்த தேர்தல். இந்த முறையும் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தார் விஜயகாந்த். தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், அது பெற்ற 10.3 சதவிகித வாக்குகள் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

தேமுதிக சந்தித்த மூன்றாவது தேர்தல் 2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் முதன்முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பிடித்தார். இந்தத் தேர்தலில் தேமுதிக 7.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 

நான்காவது முறையாக 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது தேமுதிக. இந்த முறை பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது அக்கட்சி. 14 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக இந்த முறை ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அப்போது தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 5.1.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. இரு திராவிடக் கட்சி‌ளுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த மக்கள் நலக் கூட்டணியில் ஒரு கட்சிக் கூட, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் இந்த முறை கணிசமான சரிவை சந்தித்து 2.41% ஆனது. இந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்திருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. ஒருபுறம் அதிமுகவுடன் கைகோர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த தேமுதிக மறுபுறம், திமுகவிடமும் பேரம் பேசியது. 

ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு பெற்றுவிட்டதால், இனி தேமுதிகவுக்கு இடம் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதன் காரணமாக அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி வாய்ப்பு அல்லது தனித்துப் போட்டி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தேமுதிக.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close