[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“தமிழ்ப் பெருமைக்கு ஆதாரமான பிராமி எழுத்துக்கு இந்தக் கதியா?” - நீதிபதிகள் வேதனை 

hc-judges-questioned-why-brahmi-script-based-on-the-tamil-pride-to-govt

புள்ளிமான்கோம்பை தமிழ் பிராமி எழுத்துக்கள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லாதது வருத்தமளிக்கிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுரை சமணர் பழங்கால மைய செயலர் ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழகத்தில் 450க்கும் அதிகமான சமணர் அடையாளங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மதுரை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளன. 

Image result for சமணர் குகை

மதுரையில் 26 சமணர் குகைகளும் 140 கல்படுக்கைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மதுரை நகர் பகுதியிலிருந்து 20 மைல் தொலைவில் அமைந்துள்ளன. இந்தக் குகை மற்றும் கல்படுக்கை பகுதிகளில் வட்டெழுத்துக்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு முன்பே பழமையானது என்பதற்கு சான்றாக அமையும் இந்த அடையாளங்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆகவே, மதுரையிலுள்ள சமணர் அடையாளங்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும், அந்த இடங்களை பாதுகாக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

Image result for madurai high court

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தொல்லியல்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜரானார். மனுதாரர் தரப்பில் நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, சமணர் படுகைகளில் காவலர்களாக பணியாற்ற 5000 ரூபாய் ஊதியத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

Related image

அதற்கு நீதிபதிகள், இன்றைய விலைவாசி நிலையில் 5000 ஊதியம் எப்படி போதுமானதாக அமையும்? எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் சமணர் படுகைகளில் சில இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவை முறையாக ஆவணப்படுத்தப் படவில்லை. உதாரணமாக புள்ளிமான்கோம்பை பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு பழமையான பிராமி கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக அடையாளப்படுத்தப்படவில்லை என்றார். 

Related image

இதையடுத்து நீதிபதிகள் புள்ளிமான்கோம்பையில் கண்டறியப்பட்ட பிராமி கல்வெட்டுக்கள் எவ்வளவு? அவை எவ்வளவு காலம் பழமையானவை எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தொல்லியல்துறை தரப்பில் தொல்லியல் அறிஞர் கருத்துப்படி கி.மு 500 ஆண்டுகள் பழமையானவை எனத் தெரிவித்தார்.அதற்கு நீதிபதிகள், இது மத்திய தொல்லியல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக தொல்லியல்துறை தரப்பில் இல்லை எனப் பதிலளிக்கப்பட்டது.

Related image

அதற்கு நீதிபதிகள், வரலாற்றையே மாற்றும், தமிழின் பெருமைக்கு ஆதாரமான, இந்தத் தமிழ் பிராமி எழுத்துக்கள் தொடர்பாக 2005லேயே தெரிந்தும், இதுவரை மத்திய தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லாதது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தனர்.  மேலும் புள்ளிமான்கோம்பை பகுதி ஆய்வு தொடர்பான புகைப்படங்கள், பழமையானவை என்பதற்கான ஆவணங்கள், அது தொடர்பான தொல்லியல் அறிஞர் சுப்பராயலுவின் கருத்து ஆகியவற்றைத் தாக்கல் செய்ய தமிழக தொல்லியல்துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close