[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி 

madurai-high-court-cancel-the-petition-in-against-rs-2000-scheme-of-tn-govt

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வறுமையில் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று கடந்த மாதம் 11-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்தச் சூழலில் வாக்காளர்களை கவரும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது. 

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் 3 இலட்சம் 97 ஆயிரத்தி 496 கோடி கடனில் உள்ளது என்றும், இதற்கு 29,624 கோடி வட்டியாக செலுத்தப்படும் நிலையில், அரசின் நிதி பற்றாக்குறை 44176 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல் வருடா வருடம் கடன் சுமை அதிகாரித்து கொண்டே செல்கிறது. 

மேலும் பாராளமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தச் சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதிலும் சிக்கலும், முறைகேடுகளும் நிகழும். ஆகவே,  கணக்கிடுவதிலுள்ள முரண்களைக் களைந்து தேர்தல் முடிந்த பின் உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து வழங்க வேண்டும். அதுவரை இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். 

Image result for madurai high court

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். ஊரக பகுதிகளில் 40 லட்சத்து 70 ஆயிரத்து 881 பேரும், நகர் பகுதிகளில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 234 பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.  மேலும், இதே போன்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் உத்தரவு நகலையும் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close