[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

2000 ரூபாய் சிறப்பு நிதியுதவிக்கு எதிராக திமுக தேர்தல் ஆணையத்தில் மனு..!

dmk-filed-petition-in-election-commission-against-rs-2000-scheme

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வறுமையில் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று கடந்த மாதம் 11-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ரூ.2000 நிதியுதவி அளிப்பது, தேர்தல் ஆதாயமாக அமையும் என திமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close