[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

யாருடன் கூட்டணி? தேமுதிக நாளை அவசர ஆலோசனை!

dmdk-calls-for-emergency-meeting-on-march-5

தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நாளை நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தேமுதிகவுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையப் போவதாக பேச்சு எழுந்தது. எனினும் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை தேமுதிக வெளியிடவில்லை.

தேமுதிக எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். கூட்டணி கட்சித் தலைவர் களுடன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். எனவே நாளை கூட்டணி குறித்த முடிவை தேமுதிக இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close