[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் நீட்டிப்பு

arumugamasi-inquires-into-the-death-of-former-chief-minister-jayalalithaa-for-more-than-four-months

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் நான்கு மாத அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் குவிந்ததன் அடிப்படையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. 3 மாத காலத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டது.

விசாரணைப் படலம் நீண்டதன் விளைவாக, ஆணையம் கேட்டுக் கொண்டதன் பேரில், முதன்முறையாக 6 மாதமும், பிறகு 4 மாதமும் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும், அவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் முடிவுற்றுள்ள நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என ஆணையம் தரப்பில் கோரப்பட்டு இருந்தது. இந்நிலையில், இக்கோரிக்கையை ஏற்று ஆணையத்துக்கு மேலும் 4 மாத அவகாசத்தை அரசு வழங்கியுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவது இது நான்காவது முறையாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close