[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா 

nellai-saroja-as-passed-in-group-1-exam

ஏழ்மை,வறுமை என்பதை தன் இயலாமைக்கான காரணங்களாக முன்வைப்பவர்களை புறந்தள்ளி தொடர் முயற்சியால் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் நெல்லை சரோஜாவுக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நெல்லை மாநகர சந்திப்பு அருகே சன்னியாசி கிராமம் எனும் பகுதியில் வசிக்கும் முருகானந்தம் - பால்தாய் தம்பதியினர். இவர்களின் மகள் சரோஜாவை திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் ஆட்சி தலைவரான ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். காரணம், சரோஜா ஏழ்மையான குடும்பச் சூழலில் தன்னம்பிக்கையுடன் படித்து இன்று குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையில் டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார். 

குடும்பம் மட்டுமல்லாமல் அவரது சுற்று வட்டாரமே சரோஜாவின் வெற்றியைக் கொண்டாடுகிறது. இவரது தந்தை முருகானந்தம் திரையரங்கு ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். தாய் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். சரோஜாவின் சகோதரர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சரோஜா நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 338 மதிப்பெண்களும் 12 ஆம் வகுப்பில் 719 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 

இதனைத்தொடர்ந்து உயர்கல்விக்கு இவரது வறுமையே தடையாக இருந்துள்ளது. உயர்கல்வி கனவான நிலையில், வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக பணியாற்றியுள்ளார். அப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த ஆசிரியை ஈஸ்வரம் மற்றும் அவரது கணவர் பிரம்மநாயகம் ஆகியோரின் அறிவுரையால் மாண்டிச்சரி (Montessori) முறையில் கல்வி பயின்று தமிழில் பி.லிட், எம்.ஏ. வரை முடித்திருக்கிறார். தொடர்ந்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பல்வேறு தேர்வுகள் எழுதியுள்ளார்.

பல்வேறு தேர்வுகள் எழுதி பயிற்சி எடுத்து கொண்டதன் பேரில் குரூப் 1 தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டதுடன் 375 மதிப்பெண் பெற்று 169 வது ரேங்கில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று தற்போது டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். இவரது வெற்றியை அறிந்ததும் மகிழ்ந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நனவான கனவு குறித்து சரோஜாவிடம் பேசியபோது, தற்போது டிஎஸ்பி ஆக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை கஷ்டப்பட்டு உழைத்து படிக்க வைத்த பெற்றோரை கடைசி வரை கஷ்டப்படாமல் பார்த்து கொள்வேன்.மேலும் வாழ்வில் முன்னேற ஒருவரது ஊக்கம் தேவைப்பட்டதை போல என்னை போன்று பல பெண்களை ஊக்கப்படுத்தி உருவாக்குவேன் என்றார். கிடைத்துள்ள பணியை நேர்மையாகவும், பல ஏழை குடும்பங்களுக்கு உதவும் வகையிலும் செய்வேன் என்று கூறினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close