[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: விஜயகாந்தை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

dmk-leader-stalin-to-meet-vijayakanth

தமிழக அரசியலில் அடுத்த திருப்பமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக் கப்பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜய காந்தை அழைத்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் (பிப்.24) முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அவரை இன்று சந்தித்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து அவர் விசாரித்தார். அரசியல் பேசவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் அவ ர் தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகாத நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்கிறா ர். திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை அவர் அழைப்பார் என்று தெரிகிறது. யாரும் எதிர்பார்க்காத இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close