[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

விஜயகாந்திடம் உடல்நலம் மட்டுமே விசாரித்தேன்: ரஜினிகாந்த்

i-didn-t-speak-politics-to-vijayakanth-rajinikanth

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் துளி கூட அரசியல் பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக் கப்பட்டுள்ளன. அதே போல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங் கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜய காந்தை அழைத்ததாகத் தெரிகிறது. 

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் (பிப்.24) முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் விஜயகாந்தை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்தார். அமெரிக்காவில் சிகிச் சை பெற்று திரும்பியுள்ள விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ’’நான் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது என்னை முதன்முதலில் வந் து பார்த்தவர் விஜயகாந்த். அவர் என் நண்பர். நான் அமெரிக்காவில் இருந்தபோதே அவரை சந்திக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. இப் போது சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக வந்திருக்கிறார். அவரிடம் உடல்நலம் விசாரித்தேன். இதில் துளி கூட அரசியல் பேசவில்லை. என் அரசியல் நிலை பற்றி கேட்கிறீர்கள். அது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close