[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

rajinikanth-to-meet-dmdk-leader-vijayakanth-today

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசுகிறார்.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியின் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குறித்து நேற்று திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இன்றும் தொடர்கிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜய காந்தை அழைத்ததாகத் தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் சூழ்நிலை, பரபரப்பானது. 

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் (பிப்.24) முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தை , நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்திக்கிறார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்துள்ள அவரது உடல்நிலைக் குறித்து ரஜினிகாந்த் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close