[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கணவருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி

salem-college-girl-admit-in-police-station-for-safety

சேலத்தில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு கணவருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் அனைமேடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ராஜசேகர். இவர் அதே பகுதியில் கைத்தறி கூலி வேலை செய்து வருகிறார். தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியைச் சேந்தவர் சந்திரன் மகள் புஷ்பா. இவர் நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லுரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் இருவரும் சந்தித்து, கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்களது காதல் புஷ்பாவின் குடும்பத்தினருக்கு தெரிந்து, அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ராஜசேகர் குடும்பத்தினர் சந்திரன் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது,‘தனது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், இருவருக்கும் ஜாதகம் சரிபட்டு வரவில்லை. கூலி வேலை செய்து வரும் பையனுக்கு எனது பெண்ணை எப்படி கொடுப்பது’எனக் கூறி சந்திரன் குடும்பத்தினர் பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இளம்பிள்ளை பகுதியிலுள்ள சித்ர கோவிலில், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த மாணவி புஷ்பாவின் பெற்றோர், காதல் தம்பதியை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், காதல் தம்பதியினர் உயிருக்கு பயந்து, தாரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தாரமங்கலம் காவல்துறையினர் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் செய்தனர். ஆனால், பெண் வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரித்த காவல்துறையினர், இருவரும் திருமண வயதை தாண்டியதால் காதல் ஜோடியை பாதுகாப்புடன் ராஜசேகர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெண் வீட்டாரிடம் காதல் தம்பதிக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலோ, மிரட்டலோ இருக்ககூடாது என்று எழுதி வாங்கிகொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close