[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த முதியவர் : அலறிய ஊழியர்கள் !

2-feet-snake-found-in-patient-hand-in-govt-hospital-at-virudhachalam

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாம்பு கடித்த முதியவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னகண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி ரங்கநாதன்.இவர் வழக்கம் போல அவரது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. பாம்பிடம் கடிபட்டபோதிலும் அஞ்சாத முதியவர்  ரங்கநாதன், அதனை நெகிழிப் பையில் போட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் அரசு மருத்துவமனையின் காத்திருந்தனர். அப்போது நெகிழிப் பையில் இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு உயிருடன் நெளிந்து கொண்டிருந்ததை கண்ட மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியதால், மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.

அதன்பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள்  பாம்பின் விஷத்தன்மையை அறிந்த பின்,அதற்கேற்ப மருத்துவர்கள் ரங்கநாதனுக்கு சிகிச்சை அளித்தனர். இதனைதொடர்ந்து அந்த நல்ல பாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இரண்டடி நீள நல்ல பாம்புடன் விவசாயி ரங்கநாதன் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரங்கநாதன் தொடர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close