[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

“தொகுதி பங்கீடு குறித்து இனிதான் பேசுவோம்” - வைகோ

admk-bjp-alliance-will-loss-in-all-seats-dmk-lead-alliance-will-win-40-constituency

காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் திமுக அணியில்தான் உள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து இனிமேல்தான் பேசுவோம் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக-பாமக இன்று தங்கள் மக்களவைத் தேர்தல் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நெல்லையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த வைகோ, “அதிமுக, பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமே கிடைக்காது என்ற பயம் இருக்கிறது. கர்நாடகத்தில் சில தொகுதிகள் தவிர்த்து தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. 

இந்தப் பயத்தின் காரணமாகதான் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். இந்தக் கூட்டணியில் ஒரு தொகுதிக்கு ஐம்பது கோடி செலவழிக்க திட்டமிட்டுள்ளார்கள். பிரதமரிடமும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. ஆளுங்கட்சியினர் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் மூலமா பணம் கொண்டு செல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் ஐம்பதாயிரம் பணம் கொண்டு போனாலும் அதை பிடிப்பார்கள். 
இதையெல்லாம் தூக்கி தகர்த்தெறிந்து திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவேன். பாமக-அதிமுக கூட்டணியில் என்பதால் அல்ல, ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாங்கள் எல்லாம் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறோம். விசிக, சிபிஎம், சிபிஐஎம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, காங்கிரஸ் எல்லாம் திமுக அணியில்தான் இருக்கிறோம்.  தொகுதி பங்கீடு குறித்து இனிதான் பேச்சு ஆரம்பிப்போம்” என்று தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ADMKBJPDMKVaikoவைகோஅதிமுகபாஜகதிமுக
Advertisement:
Advertisement:
[X] Close