[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள்

aiadmk-allots-7-seats-for-pmk

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள சூழ்நிலையில், கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ள நிலை யில் அதற்கான பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் வரவில்லை என்றாலும் பாஜகவின் பியூஸ் கோயல் இன்று வருகிறார். அப்போது பாஜக-வுக்கு எத்தனை தொகுதி என்பது உறுதியாக தெரிய வரும்.

இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகி யோர் சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு இன்று வந்தனர். அவர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். பின்னர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு பாமக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ’’பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகு திகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.  21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும், அதற்கு பாமக ஆதரவு தெரிவிக்கும். பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்படும்’’ என்று தெரி வித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close