[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

திருச்செந்தூர் கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

tiruchendur-masi-festival-2019

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 10- ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது  "கந்தனுக்கு அரோகரா", “முருகனுக்கு அரோகரா”  என உணர்ச்சி தழும்ப பக்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த திருவிழாவில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். தேரோட்டத்தையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close