[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

“குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” - ஆணையர் விஸ்வநாதன்

chennai-commissioner-ak-viswanathan-said-crime-rate-decreasing-due-to-cctv-camera-technology

பெருமளவு குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா உதவியினால் உடனே கண்டுபிடிக்க முடிகிறது எனப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதனால் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் அவசியம் குறித்து அடிக்கடி கூறி வருகிறார். மேலும் குற்றச் சம்பவங்களை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ‘மூன்றாவது கண்’ எனும் கண்காணிப்பு கேமரா பொருத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Image result for சிசிடிவியால் பெருமளவு குற்றம் குறைந்துள்ளது” - காவல் ஆணையர்

இந்நிலையில் சென்னை வேப்பேரி, பெரியமேடு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1768 கண்காணிப்பு கேமராக்களின் தொடக்கவிழா இன்று புரசைவாக்கம் டவுட்டன் பள்ளியில் நடந்தது. அப்போது காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேப்பேரி பகுதியிலுள்ள 1340 சிசிடிவி கேமராக்களையும், பெரியமேடு பகுதியிலுள்ள 428 சிசிடிவி கேமராக்களையும் தொடங்கி வைத்தார்.  இதில் தென்சென்னை கூடுதல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், கிழக்கு சென்னை இணை ஆணையர் பாலகிருஷ்ணன்,  கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர். 

பின்னர் பேசிய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “வேப்பேரி, பெரியமேடு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1768 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டு இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. வேப்பேரி, பெரியமேடு வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி. இந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது இருக்கும். இவ்வளவு நாளாக சிசிடிவி இல்லாமல்தான் வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏன் எல்லோரையும் சிசிடிவி பொருத்த காவல்துறை சொல்கிறது என அனைவருக்கும் தோன்றலாம்.

குற்றவாளிகளின் தன்மை நாளுக்கு நாள் மாறி கொண்டே செல்கிறது. கொள்ளையில் ஈடுபடுவர்களின் செயல்பாடுகள் வேறுவேறு மாதிரி இருக்கிறது. கொலை செய்பவர் நகைப்பறிப்பில் ஈடுபடுகிறார், நகை பறிப்பில் ஈடுபடுவர் கொலை செய்கிறார். சைக்கிள் திருடுபவர்கூட கொலை செய்கிறார். பிற மாநிலங்களில் இருந்து கூட சென்னையில் கொள்ளையடிக்கிறார்கள். தற்போது எல்லாம் மாறி விட்டது. 

Image result for சிசிடிவியால் பெருமளவு குற்றம் குறைந்துள்ளது” - காவல் ஆணையர்

உண்மையான குற்றவாளிகள் யார் என்பதனை உறுதியாக சொல்ல சிசிடிவி உதவுகிறது. உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி உதவுகிறது. குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய நாமும் வளர்ச்சி அடைய வேண்டும். இந்த மாதிரியான சிசிடிவி பொருத்தும் திட்டத்தை அரசால் மட்டுமே முழுமையாக செயல்படுத்த முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்போடுதான் திட்டத்தை நிறைவேற்றி வெற்றி பெற வைக்க முடியும். சிசிடிவி பொது மக்களின் பாதுகாப்பிற்கான முதலீடுதான். செலவு இல்லை. இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத வகையில் வீடுகளின் முன்பு சிசிடிவிக்களை சென்னை மக்கள் பொருத்தி உள்ளனர். அதற்காக பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close