[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

தருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை..!

robbery-near-dharmapuri

தருமபுரி மாவட்டம் சிக்கலூர் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நரிப்பள்ளி கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மகரஜோதி, வழக்கம்போல் இரவில் கடையை மூடிவிட்டு விற்பனை பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இருவர், முகமூடி அணிந்தவாறு அவரை பின் தொடர்ந்து சென்று சிக்கலூர் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். டாஸ்மாக் ஊழியர் மகரஜோதி நிற்காமல் சென்றதால் அவரை துரத்திச் சென்று கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்து விழுந்ததால் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். மகரஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பளரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நரிப்பள்ளி வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டிய இருவரை துரத்திப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த பணம் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

கடந்த மாதம் ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கைகளில் குண்டு பாய்ந்த நிலையில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close