[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஸ்டெர்லைட் வழக்கு : உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பு 

sc-gives-the-judgement-in-sterlite-case-at-monday

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

Image result for sterlite

இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி மின் விநியோகம் வழங்குவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள்  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close