[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!

pulwama-attack-people-paid-tribute-to-tamil-braveheart-subramanian

மதுரை விமான நிலையம் வந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ் தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வீரமரணம் அடைந்த, அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன், சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் உடல்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தன. டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர்கள் உடல்கள் திருச்சிக்கு வந்து சேர்ந்தன. அங்கிருந்து சுப்பிர மணியனின் உடல் மதுரைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. 

திருச்சி விமான நிலையத்தில் அரியலூர் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மா சீதாராமன் அஞ்சலி செலுத்தி னார். முப்படை அதிகாரிகள், காவல்துறையினர் வீர வணக்கம் செலுத்தினர். சிவச்சந்திரனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த சுப்பிரமணியன் உடல், அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உட்பட பலர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். காவலர்கள் வீரவணக்கம் செலுத்தியதை அடுத்து அவரது சொந்த ஊரான சவலாபேரிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close