[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி 

dismissed-the-petition-of-the

ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழக்குவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்ட சட்டப் பஞ்சாயத்து அமைப்பின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக தலா ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். கஜா புயலின் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியாலும் ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நிதியுதவி அறிவிக்கப்படுவதாகக் அவர் கூறினார். இம்மாத இறுதிக்குள் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து பயனாளிகளுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் தமிழக அரசின் அறிவிப்பு சட்டவிரோதம் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். 

அப்போது, தமிழக அரசு புள்ளிவிவர அடிப்படையிலேயே, மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவீதம் பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும், அதனடிப்படையில் 18 லட்சம் பேர் மட்டுமே பலனடைய தகுதியுடையவர்கள் என குறிப்பிட்டார். ஆனால் அரசு கூடுதலாக 38 லட்சம் பேர் பலனடையும் வகையில் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டி, அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, 60 லட்சம் பேர் என்பது இந்த ஆண்டில் மட்டும் எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல என்றும், 2006 முதல் ஏழை குடும்பங்கள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு அட்டை வழங்கியும், பதிவேடு பராமரித்தும் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் கொண்டவர்களை ஏழைகள் என முடிவு செய்யப்பட்டு, 2006லிருந்து பல கட்டங்களில் நடத்திய கணக்கெடுப்பில் கிராமப்புற  பகுதிகளில் 32 லட்சத்தும் 13 ஆயிரம் குடும்பங்களும், நகர்புற பகுதிகளில் 23 லட்சத்து 54 ஆயிரம் குடும்பங்களும் என 55 லட்சத்து 68 ஆயிரம் ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Image result for chennai high court

மேலும் 17 வகையான தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து பெறப்பட்ட குடும்பங்களின் விவரங்களையும் சேர்த்தே 60 லட்சம் குடும்பங்கள் என எட்டப்பட்டுள்ளதாக விளக்கமளித்தர். சிறப்பு நிதி பயனாளிகளுக்கான ஆதார் அட்டை இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை சேகரிக்க 55 ஆயிரம் பேர் கடந்த இரண்டு நாட்களாக கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், போலிகள் பயனடைவதை தடுக்க மின்னணு முறையில் பணம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அரசு அளித்த புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, 2011-12ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தற்போது மாறியிருக்கும், ஆனால் 2018-19 புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு வழக்கு தொடரவில்லை என்றும்,  வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எத்தனை பேர் என மனுதாரர் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டனர். பின்னர் பணமாக கொடுப்பதற்கு பதிலாக மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரிகள் கட்டவும், மருத்துவமனை கட்டவும் சொல்லலாம் என்றாலும், ஆனால் அதை நிறைவேற்ற வேண்டுமா என்பது அரசின் கொள்கை முடிவுகள் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close