[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

“இரண்டு வாரங்களுக்குள் அனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி” - உயர்நீதிமன்றம்

set-the-cctv-camera-in-all-department-office-by-high-court-order-to-high-authorities

தமிழகத்தில் காவல்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரண்டு வாரங்களுக்குள் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

காவல்துறை ஐ.ஜிக்கு எதிராக பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஐஜி-க்கு எதிராக பெண் எஸ்.பி. காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடம் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை கருத்தில்கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். 

மேலும், ஐஜி-க்கு எதிராக பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் காவல்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரண்டு வாரங்களுக்குள் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி தொடுத்த பாலியல் புகார் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தனது அறையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி கூறிய பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close