[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி ! பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

school-child-raped-and-murdered-near-tirutani

திருத்தணி அருகே கடந்த 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புதுவெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி வழக்கம்போல பள்ளி சென்ற அவர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆன நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். அதுதொடர்பான விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனருகில் பள்ளி சீருடை, புத்தகப்பை, தலைமுடி உள்ளிட்டவை புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யான பொன்னியும் நேரில் விசாரணை மேற்கொண்டார். மனித எலும்புக் கூடு கிடந்த இடத்தில் மாணவி அணிந்திருந்த மோதிரம், கால் கொலுசு கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சிதறி கிடந்த எலும்புகள் மாயமான மாணவி தான் என்று தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை உறுதிப்படுத்த அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 4 தனிப்படை போலீசார், சிறுமியின் பெற்றோர்கள், ஊர்க்காரர்கள், தூரத்து உறவினர்கள் என சந்தேகத்திற்கு இடமானஅனைத்து தரப்பினர் இடத்திலும் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தூரத்து உறவினரான சங்கர் ஐயா என்ற 20 வயது இளைஞர் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அதாவது, சிறுமியை ஒருதலையாக சங்கர் ஐயா காதலித்தாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி, சிறுமியை அங்குள்ள பம்புசெட்டிற்குள் வைத்து சங்கர் ஐயா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சங்கர் ஐயாவின் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மீண்டும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை கொலை செய்த அவர்கள், சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் புதைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சங்கர் ஐயாவை கைது செய்துள்ள போலீசார் அவரின் நண்பர்கள் 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close