[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து 

more-than-3-times-banned-plastic-used-store-licence-will-be-cancelled

மூன்று முறைகளுக்கு மேல் அபராதம் விதித்த பிறகும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை சட்டம் தமிழகத்தில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சுகுழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட முன்வடிவு மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில், நெகிழியை சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சிறு வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மளிகைக்கடை மற்றும் மருந்துக் கடைகளுக்கு, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதமாக விதிக்கப்படும் என்றும் வணிக வளாகம், துணிக்கடை, பல்பொருள் அங்காடிகளுக்கு, ரூ.10,000 முதல் 25,000 வரை அபராதமாக விதிக்கப்படும் என்றும் சட்ட முன்வடிவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தும் போது முதன்முறை கண்டறிந்தால் ரூ.25,000 அபராதமும், 2-வது முறை ரூ.50,000 அபராதமும், மூன்றாவது முறை ரூ.1 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று முறைகளுக்கு மேல் அபராதம் விதித்த பிறகும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close