[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“அண்ணா கொடுத்த அடியில் மீள முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ்” - ஓபிஎஸ்

mla-s-speech-at-tn-assembly

மத்திய அரசிடமிருந்து தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம். நாங்கள் யாரிடமும் சிக்கிக் கொள்ளவில்லை என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய காங் எம்எல்ஏ ராமசாமி, மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டுள்ளது. அத்துடன் மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டி வைத்துள்ளது. அதனால் மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட நிதியை தமிழகத்தால் பெற முடியவில்லை எனத் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்தவர் இருக்கும்போதுதான் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற முடியவில்லை. நாங்கள் மத்திய அரசு உள்பட யாரிடமும் சிக்கி கொள்ளவில்லை. தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம் என்றார்.

அப்போது எழுந்து பேசிய ராமசாமி, நீங்கள் குறிப்பிடும் நிதி அமைச்சராக இருந்தவறே ஐந்து மாதத்தில் மீண்டும் நிதி அமைச்சராக வரப் போகிறார் என்றார். இதனையடுத்து பேசிய அமைச்சர் தங்கமணி, யாரை யார் மிரட்டுவது? நீங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது திமுகவை மிரட்டி கூட்டணி பேரம் பேசினீர்கள். திமுகவிற்கு சொந்தமான இடங்களில் மேலே சிபிஐ ரெய்டும் கீழே கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி மிரட்டினீர்கள் என்றார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீடுகளிலும், தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடந்தது நினைவில்லையா..? அது மிரட்டல் இல்லையா என்றார். உடனே பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் மேற்கு வங்காளத்தில் சிபிஐ ரெய்டு நடந்தால் கண்டிக்கிறார். 

ஆனால் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தபோது ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை என்றார். இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், தவறான தகவலை அமைச்சர் பதிவு செய்கிறார் என்றார். தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தது நான்தான் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சிக்கி கொண்டீர்கள் சிக்கி கொண்டீர்கள் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் 1967-ல் அண்ணா கொடுத்த அடியில் சிக்கி கொண்டு மீள முடியாமல் தவிப்பது காங்கிரஸ்தான் என்றார். தொடர்ந்து சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடைபெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close