[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசம் 

chennai-metro-rail-offers-free-ride-tomorrow

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதலாம் கட்ட வழித்தடத்தில் நாளையும் இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் நாளை (12.02.2019) இலவசமாக மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்‌களிலிருந்து இலவசமாக பயணம் செய்யலாம். 

Related image

முதலாம் கட்ட வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாம் கட்ட வழித்தடம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாக இலவசமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாம் கட்ட வழித்தட்டத்தில் நீண்ட தொலைவு பயணம் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலவச பயணத்தில் பங்கேற்பார்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Image result for chennai metro rail

இதே போல் கடந்த ஆண்டு சின்னமலை, தேனாம்பேட்டை போன்ற வழித்தடங்களில் இலவசமாக இயக்கப்பட்ட போது இரண்டு லட்சம் மக்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வண்ணாரப்பேட்டை  டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close