காரைக்கால் அருகே திருநள்ளாற்றில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானுக்கு உகந்த ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.
சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்காக 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
சோழர் கால கோவிலான இதன் பழமை மாறாமல் கருங்கற்களால் வடிவமைத்து புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு விலிருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் பூக்களால் கோயிலிலுள்ள சன்னதிகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு