[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசப் பயணம் !

chennai-metro-rail-offers-free-ride-for-commuters-till-today-night

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதலாம் கட்ட வழித்தடத்தில் இன்று இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மூலம் முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்‌களிலிருந்து இலவசமாக பயணம் செய்யலாம். முதலாம் கட்ட வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாம் கட்ட வழித்தடம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாக இலவசமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாம் கட்ட வழித்தட்டத்தில் நீண்ட தொலைவு பயணம் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலவச பயணத்தில் பங்கேற்பார்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல் கடந்த ஆண்டு சின்னமலை, தேனாம்பேட்டை போன்ற வழித்தடங்களில் இலவசமாக இயக்கப்பட்ட போது இரண்டு லட்சம் மக்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்ணாரப்பேட்டை  டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close