பழனி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே கல்துறையை சேர்ந்த விவசாயி சின்னசாமி (45). இவர் இன்று காலை வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். மயில்சாமி என்பவரின் தோட்டம் அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, தோட்டத்தின் வேலியை சுற்றி வளர்ந்திருந்த இலைதழைகளை சின்னசாமி பறித்துள்ளார்.
அப்போது வயிலின் தரையில் கிடந்த மின்சார வயரை அவர் மிதித்ததில் கடுமையான மின்சார தாக்குதலுக்கு ஆளானார். இதில், சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல்துறையினர், சின்னசாமியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் ! இந்திய வீரத்தை மெச்சும் "கேசரி" டிரைலர்
புல்வாமா தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: விசிகவுக்கு எத்தனை தொகுதி?
அப்போது எதிரி இப்போது நண்பன் ! திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு