[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

“பாஜக ஆட்சி காமராஜர் விரும்பிய ஆட்சி” - பிரதமர் மோடி

pm-narendra-modi-speech-in-tiruppur-bjp-meeting

தற்போது உள்ள மத்திய ஆட்சி காமராஜர் விரும்பிய மத்திய ஆட்சி என பிரதமர் மோடி பேசினார்.

திருப்பூரில் நடைபெற்று வரும் பாஜக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “அனைவருக்கும் வணக்கம். கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். திருப்பூர் மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஏனென்றால் கொடிகாத்த திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் துணிச்சலுக்கான மண் இது. ஆச்சாரியார் மகாமூனி உள்ளிட்டோருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். தீரன் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது. பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர் நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. 

மீண்டும் ‘நமோ’ என்ற வாசகம் தாங்கி வரும் டி-ஷர்ட் திருப்பூரில் இருந்து தான் வருகிறது. தமிழகத்தில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. திருப்பூர் சிறு, குறு தொழில்கள், முறைசாரா தொழில்கள் அதிகம் இருக்கும் பகுதியாகும். கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்ததுள்ள காங்கிரஸ். இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் நாட்டில் பாதுகாப்பு பற்றி அக்கறை செலுத்தவில்லை. தொழிலாளர்கள் நலன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும். நாட்டின் பாதுகாப்புக்காக தற்போதைய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

நாட்டில் 2 பாதுகாப்பு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமையவிருக்கின்றது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. ராணுவத்தை இழிவுப்படுத்துவதற்காக, சிறுமைப்படுத்துவதற்காக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். துல்லியத் தாக்குதல்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி பேசினர். தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். இடைத்தரகர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது. நாட்டின் சாலைகள் அமைக்கப்படுவது இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் பலப்படுத்தப்படுகிறது. 

நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் முன்னேற்றத்தை உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தான் மட்டுமே மிகப்பெரிய அறிவாளி என எண்ணும் அமைச்சர் தமிழகத்தில் இருந்தார். அவர் மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்). காங்கிரஸ் கட்சியினரின் கேலி பேச்சுக்களை கேட்க நடுத்தர வர்க்கத்தினர் தயாராக இல்லை. ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாரதிய ஜனதா அரசு பூட்டுப் போட்டிருக்கிறது. காமராஜர் விரும்பிய ஊழலற்றை அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. ஒரு குடும்பமே (மறைமுகமாக ப.சிதம்பரம்) பேக்கேஜ் முறையில் ஜாமீன் பெற்றுக்கொண்டிருக்கிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close