டிடிவி தினகரனுக்கு தான் அழைப்பு விடுத்ததாக வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் வந்து இணைய வேண்டும் என்றும், அடிப்படையில் இருந்து அவர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஒரு தொண்டன் கூட இக்கட்சியில் தலைவராகவும், முதலமைச்சராகவும் வரலாம். அதற்கான நிலையை எட்டிப்பிடிப்பதற்கான தகுதியையும், திறமையையும் அவர்களே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுக்கு அழைப்பு கொடுத்ததாக செய்திகள் பரவியது. இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ''டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல். 18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.
— O Panneerselvam (@OfficeOfOPS) February 9, 2019
18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன்.
உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
விஷ சாராயம் குடித்து 32 பேர் உயிரிழப்பு - அசாமில் சோகம்
கடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா
‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி
உலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019