வி.ஜி.என். டெவலப்பர்ஸ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச்சட்டப் பிரிவின் கீழ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம், பல்வேறு வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, தொழிற்பேட்டையில் உள்ள 11.021 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது. இதற்கிடையே 10.46 ஏக்கர் நிலத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, விஜிஎன் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திற்கு 272 கோடி ரூபாய்க்கு 2013ல் விற்பனை செய்தது.
387 கோடி ரூபாய் நிலத்தை, 272 கோடி ரூபாய்க்கு விற்றதன் மூலம், மத்திய அரசுக்கு 115 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, வி.ஜி.என் டெவலப்பர்சின் நிர்வாக இயக்குனர் பிரதீஷ், முன்னாள் தலைமை செயல் அதிகாரி குப்தா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் துணைப் பொது மேலாளர் லியோன் தெரட்டில், முன்னாள் தலைமை மேலாளர் ராமதாஸ் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு, 115 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி வாங்கிய நிலத்தில்,அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து, 432 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறி, வி.ஜி.என். டெவலப்பர்ஸ் நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வி.ஜி.என் டெவலப்பர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதீஷ், முன்னாள் தலைமை செயல் அதிகாரி குப்தா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா துணைப் பொது மேலாளர் லியோன் தெரட்டில், முன்னாள் தலைமை மேலாளர் ராமதாஸ் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
விஷ சாராயம் குடித்து 32 பேர் உயிரிழப்பு - அசாமில் சோகம்
கடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா
‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி
உலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019