[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“திருநாவுக்கரசர் மூலம்தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயமானது” - ரஜினி

rajinikanth-explains-about-meet-with-thriunavukkarasar

திருநாவுக்கரசரை சந்தித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், திருநாவுக்கரசரை சந்தித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். திருநாவுக்கரசர் மூலம் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணம் நிச்சயம் ஆனது என்பதால் அவருக்கு முதல் பத்திரிகை தந்தேன் எனவும் கூறியுள்ளார்.

தொழிலதிபதிர் விசாகன் வணங்காமுடி என்பவருடன் சவுந்தர்யாவுக்கு வரும் 10-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் இந்தத் திருமணம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னதாக சவுந்தர்யாவின் திருமணத்தையொட்டி, தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close