[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

“கோடையில் கோவை தண்ணீருக்கு திண்டாடலாம்” எச்சரித்த மாநகராட்சி

water-level-is-decreased-at-siruvani-dam

கோவையின் மிக முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.6 அடியாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக  பயன்படுத்துமாறு , பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை தொடரில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக பெய்ததால் நவம்பர் மாதம் அணை நிரம்பியது. ஆனால் வானிலை மையம் கணித்தபடி வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவில்லை.

Related image

சிறுவாணி அணைப்பகுதியில் இருந்து தினமும் எட்டு கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகரப் பகுதியில் 33 வார்டுகளில் வசிப்போருக்கும், வழியோர கிராம மக்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாக உள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி 26.60 அடியாக நீர்மட்டம் உள்ளது. கோடை வெயில் அதிகரிக்கும் சூழலில், அணையில் தேங்கியுள்ள தண்ணீர் ஆவியாவது அதிகரிக்க துவங்கும் சூழல் இருப்பதால் நீர்மட்டம் இன்னும் வேகமாக குறைய துவங்கும் என்பதால், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close