மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டு வரும் தர்ணா போல தமிழகத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் காட்டுயானை சின்னதம்பி குறித்து கருத்து தெரிவித்தார். அதில் நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம். நமக்கான வாழ்வாதாரத்திற்கும் உலகம் இடம் அளித்துள்ள நிலையில் நமக்காக தான் உலகம் என்பது தவறு. அதற்கான விளைவுகளை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
சின்னதம்பி யானையை கும்கி ஆக்குவது குறித்து தமிழக அரசு இரு வேறு கருத்துகளை தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், அது தமிழக அரசின் தனி குணாதிசியம் அது என்று விமர்சித்தார். மேலும் அவர்கள் இரு நாக்கு உடையவர்கள். நான் பல வருடங்களாக பார்த்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், நவீனத்தை ஏளனம் செய்யக்கூடாது. சமயம் ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் அள்ள முடியாது என்பதால் வாளியில் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்திற்கு பேரிடரின் போது வராத பிரதமர் மோடி, தற்போது அடிக்கடி வருவதற்கு தேர்தல் தான் காரணம். மக்கள் அல்ல. பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதைப்பற்றி விவாதிக்க முடியாது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டு வரும் தர்ணா போல தமிழகத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வளவு பெரிய அழுத்தம் மேலிருந்து வந்தால் எந்த சுயமரியாதை உள்ள அரசும் ஏற்காது என்பதன் பிரதிபலிப்பதாக இந்த தர்ணா இருக்கலாம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!
“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!
“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..!
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
திருமண விருந்தை ரத்து செய்து ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !