சென்னை அம்பத்தூரில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக, போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் விதியை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் விதிப்பதே போக்குவரத்து போலீசாரின் கடமையாக உள்ளது. ஆனால் சில போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதற்கு பதிலாக லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் அம்பத்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில், அம்பத்தூர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம், ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்கிய போது ஓட்டுநர்கள் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து, காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ரவிச்சந்திரன் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஏற்கெனவே தேனாம்பேட்டையில் வாகனத்தில் சென்ற காவலர் தர்மனை தள்ளிவிட்டு சர்ச்சையில் சிக்கியவர். இதையடுத்து அவர் அம்பத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அம்பத்தூரில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அப்போது எதிரி இப்போது நண்பன் ! திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு
தமிழகத்தில் சில தினங்கள் வெயில் வெளுக்கும் - வானிலை மையம்
ஆஸி.தொடரில் ஹர்திக் பாண்ட்யா விலகல், ஜடேஜா சேர்ப்பு
அமித் ஷா இன்று தமிழகம் வருகை : மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு