[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

“ஜல்லிக்கட்டை தடை செய்ததற்கு காரணம் யார் ?” - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்

congress-and-dmk-was-reason-for-bane-jallikattu-in-tamil-nadu-nirmala-sitharaman

ஜல்லிக்கட்டு தடையாவதற்கு காரணமே காங்கிரஸ், திமுகதான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ரஃபேல் பற்றி பொய்யான தகவல்களை பரப்புகின்றன. ஜிஎஸ்டி வரியை பொருத்தவரை, வரி பெறப்படும்போதே மாநிலத்திற்கான பங்கு சென்றுவிடும். மத்திய அரசுக்கான பங்கு வந்துவிடும். மத்திய அரசு மொத்த வரியையும் பெற்றுக்கொண்டு, மாநிலத்திற்கு கொடுக்காமல் இருக்கிறது என்பதில் உண்மையல்ல. எனவே அவ்வாறு கூறுவது தவறு. 

அண்ணா அசாரே உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும். அவருக்கு நாட்டின் குடிமகன் என்ற முறையில் எந்தப் பிரச்னை குறித்தும் குரல் கொடுக்க உரிமை உண்டு. ஜல்லிக்கட்டுக்காக போராடியபோது ஒரு கேள்வியை கேட்க மறந்துவிட்டோம் என நினைக்கிறேன். ஜல்லிக்கட்டு காளையை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தது யார்? அந்தப் பட்டியலில் சேர்த்தபோது மத்தியில் இருந்த அரசுடன், கூட்டணி வைத்திருந்த தமிழக அரசு யார் ? 

அப்போது, காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இருந்தது. திமுக அதனுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது. இவ்வாறு காளை அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் தான் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு பிரதமர் மோடி மீது பழி சொன்னவர்கள். இதற்கான பதிலையும் சொல்லவேண்டும் ? இதுபோன்ற சில கஷ்டமான கேள்விகளை திமுகவிடமும், காங்கிரஸிடமும் கேளுங்கள். தற்போது மத்திய அரசு தமிழகத்தில் நிறுவனங்களை திணிப்பதாக கூறும் எதிர்க்கட்சிகள், இதையே அவர்கள் கொண்டு வரும் போது யோசிக்கவில்லையா ?” என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close