[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

120 முதியவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் சென்ற தொழிலதிபர் 

bizman-gifts-air-travel-to-120-elderly-villagers

அவினாசி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 120 ஏழை முதியவர்களை, இளைஞர்கள் உதவியுடன் தொழிலதிபர் ஒருவர் இலவசமாக விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற தாய், தந்தையை ஒருமுறையாவது விமானத்தில் அழைத்துச்செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான பிள்ளைகளின் கனவாக இருக்கும். ஆனால் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள தேவராயம்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி, தன்னுடைய சொந்த கிராமத்தை சேர்ந்த 120 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். 

இதுவரை விமானத்தை வானில் அண்ணாந்து மட்டுமே பார்த்து கொண்டிருந்த முதியவர்கள் கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் பயணம் செய்து மகிழ்ச்சியடைந்தனர். சாதி, மத, பேதமின்றி சென்னை அழைத்துவந்து இங்குள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டது எண்ணிலடாங்கா மகிழ்ச்சியை அளித்ததாக நெகிழ்ச்சியுடன் முதியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தங்களது கிராமத்திலேயே முடங்கிக் கிடந்த அவர்களின் கனவை நனவாக்கியுள்ள ரவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சுற்றுலா குறித்து பேசிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ரவி, சென்னையில் இறங்கிய முதியவர்கள் இங்குள்ள தலைவர்கள் நினைவிடங்கள், மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டு சிறு குழந்தைகள் போன்று மகிழ்ந்தனர். இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களையும் பெரும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர் என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close