[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையில் முறைகேடு” - ஓய்வு பெற்ற நீதியரசர் சண்முகம் குற்றச்சாட்டு

retired-judge-of-the-high-court-and-interim-administrator-justice-p-shanmugam-allegation-on-management-of-pachaiyappa-s-trust

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, அந்த அறக்கட்டளையை நிர்வகித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யும் நிகழ்வு சென்னை சேத்துப்பட்டில் உள்ள அந்தக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், அறக்கட்டளையை நிர்வகிப்பவருமான சண்முகம் கலந்து கொண்டு ஆண்டறிக்கையை தாக்கல் செய்தார். 

அறக்கட்டளையின் சொத்து மதிப்பு ஆயிரத்து 884 கோடி ரூபாயாக உள்ளதாகவும், அந்தப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அறக்கட்டளை சொத்துகள் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளால் போதிய வருமானம் வரவில்லை என அவர் குறிப்பிட்டார். 

          

அறக்கட்டளைக்காக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அதில் முழு கவனம் செலுத்துவதில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான தேர்வு முறையை மாற்றினால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் கருத்து தெரிவித்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close